கொழும்பு, புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்திலிருந்து தூர இடங்களுக்கான பஸ் சேவைகளை இடை நிறுத்த நடவடிக்கையெடுத்துள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் பிரதி பொது முகாமையாளர் ஏ.எச்.பண்டுக்க தெரிவித்துள்ளார்.
இதற்கமைய இன்று மாலை 6 மணிக்கு பின்னர் கொழும்பிலிருந்து புறப்படவிருந்த தூர இடங்களுக்கான அனைத்து பஸ் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக மாலை 6 மணி முதல் புறக்கோட்டை பிரதேசத்திற்கு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காரணத்தினாலேயே இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக ஏ.எச்.பண்டுக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து இன்று இரவு புறப்படவிருந்த மட்டக்களப்பு , யாழ்ப்பாணம் மற்றும் பதுளைக்கான தபால் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.