தனது சேவைக் காலத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பவுள்ள இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் சுகியாமா அக்கிரா, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்தார்.
ஜனாதிபதி செயலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
ஆறு இலட்சம் அஸ்ட்ரா செனெக்கா தடுப்பூசிகளை ஜப்பானிலிருந்து பெற்றுக்கொள்வதற்கும் கொவிட் தொற்றொழிப்பை வெற்றிகரமாக்கிக் கொள்வதற்கும் சுகியாமா அக்கிரா, பல்வேறு வழிமுறைகளில் இலங்கைக்கு பெற்றுக்கொடுத்த சேவைகளுக்கு, ஜனாதிபதி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
இதன்போது, இரு நாடுகளுக்கு இடையிலான நட்புணர்வை பலப்படுத்திக்கொண்டு, தேவைப்படும் எந்தவொரு தருணத்திலும் இலங்கைக்கான ஒத்துழைப்பு வழங்கத் தான் முயற்சிப்பதாக, ஜனாதிபதியிடம் ஜப்பானியத் தூதுவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர மற்றும் ஜப்பானியத் தூதரகத்தின் பிரதித் தலைவர் கட்சுகி கொட்டாரோ ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.