
காலி, பூஸா உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் 21 கைதிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என சிறைச்சாலை அதிகாரிகள் இன்று (25) தெரிவித்துள்ளனர்.
குறித்த சிறைச்சாலையில் 30 கைதிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனையிலேயே 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தொற்றுக்குள்ளான கைதிகள், அங்குனுகொல பெலஸ்ஸ சிறைச்சாலைக்கு அருகிலுள்ள கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.