மேல் மாகாணத்தின் முன்னாள் ஆளுனர் அசாத் சாலிக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 9 ஆம் திகதி நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் இனரீதியிலான சர்ச்சைக்குரிய கருத்தினை வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டில் மார்ச் 16 ஆம் திகதி குற்றப்புலனாய்வு பிரிவினால் அசாத் சாலி கைதுசெய்யப்பட்டார்.
இதன்படி அவர் மீதான வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் குணரத்ன தலைமையில் இடம்பெற்ற போது, சட்டமா அதிபரினால் குறித்த குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
இதன்போது சிறைச்சாலை அதிகாரிகளினால் அசாத் சாலி, நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தார்.
குறித்த வழக்கை மீண்டும் நவம்பர் 2 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக அறிவித்த நீதிபதி, அன்றைய தினத்தில் சாட்சியாளர்களை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுத்தார்.