
தனிப்பட்ட பயணத்தை மேற்கொண்டு ‘அதானி’ குழுமத்தின் தலைவரான கௌதம் அதானி, இலங்கை வந்துள்ளார்.
இந்தியாவில் இருந்து நேற்று இரவு விசேட விமானம் மூலம் இவர், இலங்கை வந்துள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
கௌதம் அதானி, இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட அரச உயர்மட்ட தரப்பினரை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்போது, கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் உள்ளிட்ட அதானி குழும நிறுவனத்தின் முதலீடுகள் மூலம் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக கூறப்படுகின்றது.