April 17, 2025 11:05:55

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை பொறியியல் கல்வி நிறுவகத்தின் புத்தாக்கப் போட்டியில் யாழ். பல்கலைக்கழகம் முதலிடம்

இலங்கை பொறியியல் கல்வி நிறுவகத்தினால், பல்கலைக்கழக மாணவர் அணிகளுக்கிடையில் நடாத்தப்பட்ட புத்தாக்க கண்டுபிடிப்பாளர் போட்டியில் யாழ். பல்கலைக்கழக மாணவர் அணி, பிரபலமான கண்டுபிடிப்புக்கான முதலாம் பரிசைப் பெற்றுள்ளது .

மாணவர்களிடையேயான புத்தாக்க ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்தப் போட்டி நடத்தப்பட்டது.

இதில் யாழ். பல்கலைக்கழக மாணவர் குழு உணவுக் கழிவுகளில் இருந்து லஞ்ச் சீற்றைப் பிரித்தெடுக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த கண்டுபிடிப்பு, முதலாம் இடத்தைப் பெற்று பிரபலமான கண்டுபிடிப்புக்கான விருதுக்குரியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் போட்டியின் வெற்றியாளர் தெரிவுக்கான நடுவர்களாக இலங்கை புத்தாக்குனர் ஆணைக்குழுவின் அதிகாரிகள் பங்கு கொண்டிருந்தனர்.