February 22, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நல்லூர் ஆலயத்தின் 11 ஆவது நிர்வாக அதிகாரியாக குமரேஷ் ஷயந்தன மாப்பாண முதலியார் பொறுப்பேற்றார்

யாழ்ப்பாணம், நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பதினோராவது நிர்வாக அதிகாரியாக குமரேஷ் ஷயந்தன குமாரதாஸ் மாப்பாண முதலியார் பொறுப்பேற்றுள்ளார்.

ஆலயத்தின் பத்தாவது நிர்வாக அதிகாரியாக பணியாற்றிய குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியார் ஒக்டோபர் 9ஆம் திகதி காலமானார்.

அதனை தொடர்ந்து குமரேஷ் ஷயந்தன குமாரதாஸ் மாப்பாண முதலியார் பணிகளை பொறுப்பேற்றுள்ளார்.

இதன்படி இன்றைய தினம் காலை அவர், நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு சென்று விசேட பூஜை வழிப்பாட்டில் ஈடுபட்டார்.

இதேவேளை மறைந்த குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியாரின் நினைவாக, 92 பனைமர விதைகள், நல்லூர் சைவத் தமிழ்ப் பண்பாட்டுக் கலைக் கூடல் அமைப்பினால் செம்மணிவீதியும் நல்லூரான் செம்மணி வளைவும் சந்திக்கும் வீதியோரங்களில் இன்று நாட்டப்பட்டன.

இந்த நிகழ்வில் வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன், யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன், யாழ் மாநகர சபை ஆணையாளர் த.ஜெயசீலன், நல்லூர் பிரதேச சபை தவிசாளர் மயூரன் , கலைக்கூடல் அங்கத்தவர்கள், குகனேயர் குழாம் அங்கத்தவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

This slideshow requires JavaScript.