இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தவிசாளர் பதவியிலிருந்து ராஜா கொல்லுரே நீக்கப்பட்டுள்ளார்.
கட்சியின் தலைமையகத்தில் இன்று (24) நடைபெற்ற கட்சியின் மத்திய குழுக் கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ராஜா கொல்லுரே வடமேல் மாகாணத்தின் தற்போதைய ஆளுநராகவும் பதவி வகித்து வருகிறார்.
கடந்த 21 ஆம் திகதி பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்ட போது, வடமேல் மாகாணத்தில் கடமைக்கு சமுகமளிக்காத ஆசிரியர்களின் நவம்பர் மாத சம்பளத்தை குறைக்க ஆலோசிப்பதாக கூறி ராஜா கொல்லுரே கவனத்தை ஈர்த்திருந்தார்.
இந்த கருத்துக்கள் தொடர்பாக தொழிற்சங்கங்கள் மற்றும் பிற குழுக்களிடமிருந்து ஆளுநர் ராஜா கொலுரே கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருந்தார்.