April 30, 2025 19:17:18

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

13 ஆவது திருத்தம்: இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்க தமிழ்க் கட்சிகள் தீர்மானம்!

File Photo

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறு இந்திய அரசை கூட்டாக வலியுறுத்துவதற்கு தமிழ்க் கட்சிகள் தீர்மானித்துள்ளன.

இது தொடர்பில் எதிர்வரும் 2 ஆம் திகதி தமிழக் கட்சிகளின் கூட்டமொன்றை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக கட்சிகளின் பிரதிநிதிகள் சிலருக்கிடையே நேற்று இணையவழியில் கலந்துரையாடலொன்று நடத்தப்பட்டுள்ளது.

இந்தக் கலந்துரையாடலில் செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் விக்னேஸ்வரன் சார்பாக பேராசிரியர் சிவநாதன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

இதன்படி 2 ஆம் திகதி நடக்கவுள்ள கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசிக் கூட்டணி மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆகிய கட்சிகள் கலந்துகொள்ளவுள்ளன.