ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் விசேட கூட்டமொன்று இன்று நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில், ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது நாட்டின் பொருளாதார நிலவரம், 2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் மற்றும் கெரவலப்பிட்டி அனல் மின்நிலையம் தொடர்பான பிரச்சனை ஆகியன தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.
இதேவேளை கெரவலப்பிட்டிய அனல் மின்நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்குவதற்கு எதிராக தீர்மானங்களை எடுத்துள்ள ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட 11 பங்காளிக் கட்சிகளும் அது தொடர்பில் அந்தக் கூட்டத்தில் அறிவிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.