
அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின்போதே அவருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அவர் அது தொடர்பில் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வாரம் இடம்பெற்ற பாராளுமன்றக் கூட்டத்தொடரில் அவர் பங்கேற்று இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.