பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ், கொழும்புப் பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு கடிதமொன்றை அனுப்பியள்ளார்.
இலங்கையில் 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பிலேயே பாப்பரசர், குறித்த கடிதத்தை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனது கையெழுத்துடன் அந்தக் கடிதத்தை அனுப்பி வைத்துள்ள பாப்பரசர், ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து தாம் கவலையடைவதாகவும் அது தொடர்பாக தாம் பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இதேவேளை பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை சரியென நினைக்கும் சிறந்த விடயத்தை செய்யுமாறும், தாம் விசுவாசித்து செய்ய வேண்டிய நல்ல விடயத்தை கூறுமாறும் அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் கொழும்பு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.