May 28, 2025 9:31:17

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பி.சி.ஆர். சோதனைகளை அதிகரியுங்கள்; அரசாங்கத்திடம் உபுல் ரோஹண கோரிக்கை

நாட்டில் பி.சி.ஆர். மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளை உடனடியாக அதிகரிக்க வேண்டும் என்று பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டில் கடந்த மூன்று நாட்களில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதே அதற்கு காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால், நாடெங்கும் எழுமாற்றாக பி.சி.ஆர். மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளை அரசு நடத்தவில்லையெனில் மீண்டும் பேராபத்து நிலைமை நிச்சயம் ஏற்படக்கூடும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.