May 28, 2025 19:13:51

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘பருப்பு, அரிசி விலைகளைப் பார்ப்பதற்காக என்னை நியமிக்கவில்லை’: ஜனாதிபதி

பருப்பு வகைகள் மற்றும் அரிசியின் விலைகளைப் பார்ப்பதற்காக தன்னை நியமிக்கவில்லை என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ குறிப்பிட்டுள்ளார்.

இயற்கை விவசாய முறையில் பயிரிடப்பட்ட பண்ணை ஒன்றைப் பார்வையிட்ட பின்னர் உரையாற்றும் போதே, ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்துவதற்காகவே தான் நியமிக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த அரசாங்கங்களும் இயற்கை விவசாயத்துக்கு மாறும் பணியைச் செய்ய முயற்சித்ததாகவும் அது கடினமான பணியாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் இரசாயன உரப் பயன்பாடு தடை செய்யப்பட்டதற்கு எதிராக விவசாயிகள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சேதன உர பயன்பாட்டை ஊக்குவிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.