ஏறாவூரில் இளைஞர்கள் இருவரைத் தாக்கிய பொலிஸ் அதிகாரி பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர அறிவித்துள்ளார்.
வீதியில் பொலிஸ் அதிகாரி ஒருவர் இளைஞர்கள் இருவரைத் தாக்கும் வீடியோவை பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் டுவிட்டரில் பதிவிட்டு, பொறுப்பான அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, விடயத்தை ஆராய்ந்து அதிகாரையை பணியில் இருந்து இடைநிறுத்த அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பொலிஸாரின் கொடுமைகள் தொடர்வதாக சாணக்கியன் எம்.பி. சுட்டிக்காட்டியுள்ளார்.
சாணக்கியன் எம்.பிக்குப் பதிலளித்துள்ள அமைச்சர் சரத் வீரசேகர, ‘இளைஞர்களைத் தாக்கும் அதிகாரம் பொலிஸாருக்கு இல்லை. இதுதொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.
வீதி விபத்தொன்றின் விடயங்களை ஆராய்ந்துகொண்டிருந்த பொலிஸ் அதிகாரியின் பணிக்கு இடையூறு செய்த காரணத்தினால், தாக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Thank you Min.@ReAdSarath for taking prompt action. I will also follow up on this issue. https://t.co/pDRowomafI pic.twitter.com/7NdmadC0ZZ
— Shanakiyan Rajaputhiran Rasamanickam (@ShanakiyanR) October 23, 2021