January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மக்கள் நம்பிக்கையை வீணடிக்கும் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு எச்சரிக்கை

பொதுமக்கள் நம்பிக்கையை வீணடிக்கும் வகையில் நடந்துகொள்ளும் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.

உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களின் நடத்தைகள் தொடர்பாக கண்காணிப்புடன் இருக்கும்படி தேர்தல் ஆணைக்குழு, மாகாண ஆளுநர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளது.

சில உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களின் நடத்தைகளில் மக்களின் நம்பிக்கையை வீணடிக்கும் போக்குகள் காணப்படுவதாக தேர்தல் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

மேற்படி உறுப்பினர்களின் மோசமான நடத்தைகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு, ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதாகவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.