May 23, 2025 20:25:05

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பென்டோரா பத்திரங்கள் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யோசனைக்கு எதிர்க்கட்சி ஆதரவு

‘பென்டோரா பேப்பர்ஸ்’ இரகசிய ஆவணங்கள் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முன்வைத்த யோசனைக்கு எதிர்க்கட்சியான, ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவு தெரிவித்துள்ளது.

‘பென்டோரா பேப்பர்ஸ்’ இரகசிய ஆவணங்களில் இலங்கையின் திருக்குமார் நடேசன் மற்றும் நிரூபமா ராஜபக்‌ஷ ஆகியோர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், ‘பென்டோரா பேப்பர்ஸ்’ இல் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள இலங்கையர்களின் வெளிநாட்டு சொத்து விபரங்களை ஆராய்வதற்கு பாராளுமன்ற தெரிவுக் குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர், இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர பாராளுமன்றத்தில் முன்வைத்த மேற்படி யோசனைக்கு தாம் ஆதரவளிப்பதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.