இழுவை மடி தொழில் கூடிய விரைவில் நிறுத்தப்பட வேண்டும் என இலங்கை – இந்திய கூட்டறிக்கையின் மூலமாக தெரிவிக்கப்பட்டு பொது இணக்கம் காணப்பட்டுள்ளது. அதனை மீறிய வகையில் இலங்கையின் கடல் வளத்தை அழிக்கும் செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த 2013 ஆம் ஆண்டில் தனியார் சட்டமூலம் ஒன்றினை கொண்டுவந்தேன்.எனினும் நிறைவேற்ற முடியாது போய்விட்டது. பின்னர் 2016 ஆம் ஆண்டில் தனியார் சட்டமூலம் ஒன்றினை முன்வைத்தேன். அதனை அரசாங்கத்தின் சட்டமாக கொண்டுவந்து நிறைவேற்றினர் என்பதை சுட்டிக்காட்டிய அவர்,
இந்தியாவிற்கு எதிராக மீனவர் போராட்டம் நடத்தப்பட்டதாக பொய்யான பிரசாரம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த விடயத்தில் இரண்டு நாடுகளுக்கு இடையிலும் எந்த வேறுபாடும் கிடையாது.ஏனென்றால் இலங்கை- இந்திய கூட்டறிக்கையில் இழுவை மடி மீன்படி நிறுத்தப்பட வேண்டும் என இந்தியாவே வலியுறுத்தியுள்ளது.அதனையே நாமும் வலியுறுத்திக் கொண்டுள்ளோம் என்று சுமந்திரன் மேலும் தெரிவித்தார்.