February 22, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ். மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களின் பெண் அரசியல் பிரதிநிதிகளுக்கான விசேட செயலமர்வு!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களின் பெண் அரசியல் பிரதிநிதிகளுக்கான விசேட பயிற்சி வழங்கும் செயலமர்வொன்று இடம்பெற்றது.

ஜரோப்பிய ஒன்றியத்தின் நிதிப் பங்களிப்பில் ‘சேர்ச் போ கொமன் கிரவுண்ட்’ என்ற சர்வதேச தன்னார்வ அமைப்பு மற்றும் மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இதில் உள்ளுராட்சி மன்ற பெண் பிரதிநிதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டதுடன் விசேடமாக ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் டெனிஸ் சைபி மற்றும் ஜரோப்பிய ஒன்றியத்தின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதன்போது, உள்ளூராட்சி மன்ற பெண் பிரதிநிதிகள் தங்களுடைய வேலைத்திட்டங்களை வெளிப்படுத்துவதிலும் தங்களுடைய செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுப்பதிலும் உள்ள சவால்கள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன் அதனை வெற்றிகொள்வது தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டது.

This slideshow requires JavaScript.