February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”அமைச்சரின் ஏழு மூளைகளுக்கும் என்ன நடந்தது?”

அரசாங்கத்திடம் மக்கள் பிரச்சனைகளை தீர்ப்பதற்கான வேலைத்திட்டங்கள் எதுவும் கிடையாது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த அரசாங்கத்தினால் விலைகளை அதிகரிக்க முடியுமே தவிர, வேலைகளை செய்ய முடியாது என்றும் சஜித் பிரேமதாஸ கூறியுள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் தோல்வியடைந்த பொருளாதார திட்டங்களால் மக்களே பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, 7 மூளைகளுடன் ஒருவர் வருகின்றார் என்றும், அவர் வந்ததும் அனைத்து பொருட்களின் விலைகளும் குறையும் என்றும் கடந்த காலங்களில் கூறிவந்த போதும் அந்த மூளைகளுக்கு என்ன நடந்தது என்று கேட்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தற்போது நாட்டில் வரிசை யுகம் உருவாகி வருகின்றது என்றும் இதனை பார்க்கும் போது 70 -77 காலப்பகுதியை நோக்கி நாடு சென்றுகொண்டிருக்கின்றதா? என்று சிந்திக்க வைப்பதாகவும் அவர் தெரிவிததுள்ளார்.