விவசாயிகளின் உரம் தொடர்பான பிரச்சனைகளை அடிப்படையாகக் கொண்டு பாராளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மகிந்த யாப்ப அபேவர்தன தலைமையில் பாராளுமன்றம் கூடியதை தொடர்ந்து, மனுக்கள் சமர்ப்பிப்பு மற்றும் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் பின்னர் தினப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.
இதன்போது சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் விவசாயிகளுக்கான உரத்தை உடனடியாக வழங்கு என்று கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதுடன், சபையில் அமைதியின்மையும் ஏற்பட்டது.