நுவரெலியா மாவட்டத்தின் அட்டன் மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களில் மீன் வியாபாரத்துடன் தொடர்புடைய 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு, பேலியாகொட மீன் சந்தைக்கு சென்று வந்தவர்களே இவ்வாறாக தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக பிரதேசங்களுக்கு பொறுப்பான பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
அட்டன் நகரில் ஒருவரும், கினிகத்தேனை – மில்லகாமுல்ல மற்றும் பஹல கடவல பிரதேசங்களைச் சேர்ந்த இருவரும், பொகவந்தலாவ கொட்டியாகல பிரதேசத்தில் ஒருவரும், மஸ்கெலியா பிரவுன்லோ பிரதேசத்தில் ஒருவரும் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக நேற்று இரவு வெளியான பீசீஆர் பரிசோதனை முடிவுகள் மூலம் உறுதியாகியுள்ளமது.
இதனை தொடர்ந்து அட்டன், பொகவந்தலாவ, கினிகத்தேனை, மஸ்கெலியா பிரதேசங்களில் மீன் கடைகளை மூடுவதற்கு சுகாதார அதிகாரிகள் நடவடிக்கையெடுத்துள்ளனர்.
மேலும் பிரதேசங்களில் தொற்றாளர்களுடன் தொடர்புகளை பேணியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்கள் பீசீஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.