இளைஞர்கள் விரக்தியடைந்து, நாட்டை விட்டு வெளியேறுவதற்கு அரசாங்கமே காரணம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம்சாட்டியுள்ளார்.
விவசாயிகளின் அவலங்களை விசாரிக்கும் களப் பயணத்தின் போதே, எதிர்க்கட்சித் தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டிற்கு பெரும் சக்தியை வழங்கும் இளம் தலைமுறையினர் நாட்டை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதை கடவுச்சீட்டு வரிசைகளில் கண்டுகொள்ளலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
நாட்டின் எதிர்காலத்தைப் பொறுப்பேற்கக் காத்திருக்கும் இளைய தலைமுறையினரிடையே, அரசாங்கம் அவநம்பிக்கையை உருவாக்கியுள்ளதாகவும் சஜித் குறிப்பிட்டுள்ளார்.
யாருக்கும் தொந்தரவின்றி இந்த நாட்டிற்கு உணவு வழங்கிய விவசாயிகளை அரசாங்கம் படுகுழியில் தள்ளியுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.