October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையின் ஆறுகளில் மனித மாமிசம் உண்ணும் மீனினம் கண்டுபிடிப்பு

file photo: pixabay.com

இலங்கையின் ஆறுகளில் மனித மாமிசம் உண்ணும் மீனினம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

களனி கங்கை, பொல்கொட மற்றும் தியவன்னா ஓயா ஆகிய ஆறுகளில் ‘பிரானா’ வகை மீனினம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நீர்வாழ் உயிரினங்கள் தொடர்பான நிபுணர் அஜித் குமார தெரிவித்துள்ளார்.

இவ்வகை மீனினம் ஆறுகள் மற்றும் கங்கைகளில் ஏதோவொரு விதமாக விடப்பட்டுள்ளதாகவும், அவை பெருகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வளர்ப்பு மீன்களை இலங்கைக்கு கொண்டு வரும் போது இவை கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்றும் அதன் பின்னர் கங்கைகளுக்கு விடுவிக்கப்பட்டிருக்கலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான மீனினங்கள் பெருகுவது ஆபத்தாக அமையும் என்று நீர்வாழ் உயிரின நிபுணர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரானா மீனினம் தம்மைவிட பன்மடங்கு பெரிய விலங்குகளைக்கூட ஒரு சில நிமிடங்களில் கடித்துக் குதறி, எலும்புக் கூட்டை மட்டும் விட்டுவைக்கும் திறன் படைத்தவை.

இந்த மீன்களின் பற்கள் சவர அலகு போன்று கூர்மையானவை என்பதோடு, தாடைகள் மிகவும் வலிமைமிக்கவை ஆகும்.