ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று பாராளுமன்றத்துக்கு விஜயம் செய்துள்ளார்.
பாராளுமன்றக் கட்டடத் தொகுதிக்கு வருகை தந்த ஜனாதிபதியை அவைத் தலைவர் தினேஷ் குணவர்தன, இராஜாங்க அமைச்சர்களான கனக ஹேரத், நாலக்க கொடஹேவா, கஞ்சன விஜேசேகர, அருந்திக்க பெர்ணான்டொ மற்றும் பாராளுமன்ற உறுப்பினரான இசுரு தொடங்கொட ஆகியோர் வரவேற்றனர்.
ஜனாதிபதி அவைக்குள் பிரவேசிக்கும் போது, நிலையியல் கட்டளை 27ஃ2இன் கீழ், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்விகளை எழுப்பிக் கொண்டிருந்தார்.
எதிர்க்கட்சித் தலைவரின் வாய்மொழி மூல கேள்விகளுக்கு, அமைச்சர்களான மகிந்தானந்த அளுத்கமகே மற்றும் லசந்த அழகியவன்ன ஆகியோர் வழங்கிய பதில்களை, ஜனாதிபதி செவிமடுத்துக்கொண்டு இருப்பதை படத்தில் காணலாம்.