கெரவலபிட்டிய மின்னுற்பத்தி நிலைய ஒப்பந்தத்திற்கு எதிராக எதிர்க்கட்சி அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளது.
கெரவலபிட்டிய மின்னுற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு வழங்கும் தீர்மானத்தை எதிர்க்கட்சி உயர் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தியுள்ளது.
குறித்த மனுவின் பிரதிவாதிகளாக பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, அமைச்சரவை, வெஸ்ட் கோஸ்ட் மின் வலு நிறுவனம், யுகதனவி நிலைய உரிமையாளர், நியூ போட்ரஸ் நிறுவனம், சட்டமா அதிபர் உட்பட மேலும் சிலர் பெயரிடப்பட்டுள்ளனர்.
எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரின் ஊடாக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கெரவலபிட்டிய மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு விற்பனை செய்வதற்கு எதிராக கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் மற்றும் எல்லே குணவன்ஷ தேரர் ஆகியோரும் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.