May 25, 2025 9:31:11

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வடமாகாணத்தின் நிலைவரம் சம்பந்தமாக முப்படையினருடன் ஆளுநர் கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநராக புதிதாக பதவியேற்றுள்ள ஜீவன் தியாகராஜா முப்படையினர் மற்றும் பொலிஸாருடன் இணைந்து வடமாகாணத்தின் தற்போதுள்ள பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக ஆராய்ந்துள்ளார்.

யாழ்.பொலிஸ் நிலையத்திற்கு இன்று காலை வருகை தந்த ஆளுநர் பல்வேறு தரப்பினருடனும் சந்திப்பில் ஈடுபட்டார்.

வட மாகாணத்தின் தற்போதைய பாதுகாப்பு நிலைவரங்கள், செய்யப்படவேண்டிய விடயங்கள் தொடர்பில் நீண்ட நேரம் இதன்போது ஆராயப்பட்டது.

இதன்போது வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ஜகத் பளிகக்கார, யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த லியனகே, யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், கடற்படை, விமானப் படை, இராணுவ அதிகாரிகளுடன் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளார்.