February 22, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘புதிய அரசியல் அமைப்பை விட மக்களின் உயிரை பாதுகாப்பது அவசியம்’

புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்ற ஜனாதிபதியின் நோக்கமும், அரசாங்கத்தின் நோக்கமும் தெளிவாக உள்ளது.எனினும் கொவிட் வைரஸ் தொற்றுப்பரவல் சவால்களுக்கு மத்தியில் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கதை துரிதப்படுத்த முடியாது போயுள்ளது என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

புதிய அரசியல் அமைப்பு உருவாக்கத்தை விடவும் கொவிட் சவால்களில் இருந்து மக்களை காப்பாற்றுவதே சவாலாக அமைந்ததாகவும் அவர் கூறுகின்றார்.

புதிய அரசியல் அமைப்பை உருவாக்கி அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வுகளை காணவேண்டும் என்பதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் தீர்மானமாக அமைந்தது.அரசியலமைப்பை புதிதாக உருவாக்க வேண்டும் என எமது கொள்கை பிரகடனத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல், அரசாங்கத்தை அமைத்த பின்னர் தொடர்ச்சியாக இந்த விடயங்கள் குறித்து ஆராயப்பட்டது.புதிய அரசியல் அமைப்பை உருவாக்கும் நகர்வுகளும் ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.குறிப்பாக சகல கட்சிகளினதும், சிவில் அமைப்புகளினதும் பரிந்துரைகளை பெற்றுக் கொள்ளவும் ஜனாதிபதியினால் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. எனவே அரசாங்கம் முயற்சிகளை எடுக்கவில்லை என கூற முடியாது.ஆனால் நாம் துரிதமாக இந்த செயற்பாடுகளில் ஈடுபட முடியாது போனமை உண்மையே என்றார்.