இலங்கையில் 200 மாணவர்களுக்குக் குறைவாக உள்ள பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவுகளை இன்று திறப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
கொரோனா தொற்று தீவிரமடைந்ததைத் தொடர்ந்து மூடப்பட்ட பாடசாலைகள் ஆறு மாதங்களின் பின்னர் திறக்கப்பட்டுள்ளன.
பாடசாலைகள் திறக்கப்பட்டாலும், அதிபர்- ஆசிரியர்களின் பாடசாலை வரவு குறைவாகவே காணப்பட்டுள்ளது.
தமது சம்பளப் பிரச்சினைக்கு முறையான தீர்வு வழங்கப்படாததால் பணி பகிஷ்கரிப்பைத் தொடர்வதாக அதிபர்- ஆசிரியர் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
தொழிற்சங்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தாத மற்றும் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடாத சில அதிபர்- ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு வருகை தந்துள்ளனர்.
நாட்டில் 200 மாணவர்களுக்குக் குறைவாக உள்ள 3000 க்கு மேற்பட்ட பாடசாலைகள் காணப்படுகின்றன. அத்தோடு, வட மாகாணத்தில் இவ்வாறான 600 பாடசாலைகள் காணப்படுகின்றன.
ஆசிரியர்கள் 25 ஆம் திகதி பாடசாலைகளுக்கு வருவதாக அறிவித்துள்ளனர்.
வடக்கின் யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் மன்னார் போன்ற பிரதேசங்களில் குறைவான மாணவர்களும் ஆசிரியர்களுமே பாடசாலைகளுக்கு வருகை தந்துள்ளனர்.