இலங்கையில் முதற்தடவையாக தாயொருவர் ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளை பிரசவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் இன்று அதிகாலை குறித்த தாய் 3 பெண் குழந்தைகளையும் 3 ஆண் குழந்தைகளையும் பிரசவித்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த 6 குழந்தைகளும், தாயும் ஆரோக்கியமாக இருப்பதாகவும் வைத்தியர்கள் கூறியுள்ளனர்.
கொழும்பு அங்கொடையை சேர்ந்த 31 வயது தாயொருவரே இவ்வாறு 6 குழந்தைகளையும் பிரசவித்துள்ளார்.