January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வெளிவிவகார அமைச்சர் பீரிஸுடன் பிரான்ஸ் தூதுவர் சந்திப்பு

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் எரிக் லாவெர்டு, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸை மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளார்.

கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையேயான பலதரப்பட்ட ஒத்துழைப்பு மற்றும் நட்புறவை இரு தரப்பினரும் வரவேற்றதுடன், இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினர் என்று வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை இருதரப்பு வர்த்தக விரிவாக்கம், முதலீடு, சுற்றுலாத்துறை உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதன்படி வர்த்தக மற்றும் சுற்றுலாத்துறை உறவுகளை மேலும் பலப்படுத்தும் வகையில் கொழும்பு மற்றும் பாரிஸுக்கு இடையேயான நேரடி விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்கும் திட்டத்தை இருவரும் வரவேற்றுள்ளனர்.