January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எக்ஸ்- பிரஸ் பேர்ல் கப்பலின் எரிபொருள் சுற்றாடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம்

எக்ஸ்- பிரஸ் பேர்ல் கப்பலின் எரிபொருள், சுற்றாடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் காணப்படுவதாக கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இலங்கையின் கடற்பரப்பில் மூழ்கிய எக்ஸ்- பிரஸ் பேர்ல் கப்பலின் சுற்றாடல் தாக்கங்களில் இருந்து விடுபடவில்லை என்று குறித்த அதிகாரசபையின் தலைவர், சட்டத்தரணி தர்ஷனி லஹந்தபுர தெரிவித்துள்ளார்.

கப்பலின் 278 மெட்ரிக் டொன் எரிபொருள் கடலில் கலக்கும் அபாயம் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கப்பலில் உள்ள எரிபொருள் தொடர்பாக உறுதியான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணி தர்ஷனி லஹந்தபுர தெரிவித்துள்ளார்.