June 15, 2025 8:27:24

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ்.மாநகர சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளம் அங்குரார்ப்பணம்

யாழ்.மாநகர சபையின் உத்தியோகபூர்வ அலுவலக இணையத்தளம் இன்று புதன்கிழமை (20) வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

யாழ்ப்பாண பொது நூலக கேட்போர் கூடத்தில் யாழ்ப்பாண மாநகர சபையின் இணையத்தளமானது யாழ்.மாநகர முதல்வர், மாநகர ஆணையாளரினால் உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

இணையத்தள அங்குரார்ப்பண நிகழ்வில் யாழ்.மாநகர சபை உத்தியோகத்தர்கள்,உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள யாழ்.மாநகர சபையின் இணையத் தளத்தில் யாழ்.மாநர சபை தொடர்பான சகல தகவல்களையும் சேவைகளையும் பொதுமக்கள் இணையத் தளத்தின் மூலம் பெற்றுக் கொள்ள முடியும்.