
ஆசிரியர்களின் சம்பள துண்டிப்பு தொடர்பாக வடமேல் மாகாண ஆளுநர் வெளியிட்ட கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகளில் கல்விப் போதனை நடவடிக்கைகளில் ஈடுபடாத வடமேல் மாகாண ஆசிரியர்களின் சம்பளம் துண்டிக்கப்படும் என்று ஆளுநர் ராஜா கொல்லூரே தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஆளுநரின் கருத்துக்கு அதிபர்- ஆசிரியர் தொழிற்சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
மாகாண ஆளுநராக, தனக்கு கல்வி அமைச்சரின் அதிகாரங்களை செயற்படுத்த முடியும் என்றும் 21 ஆம் திகதி பாடசாலைக்கு வராத ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாது என்றும் ஆளுநர் ராஜா கொல்லூரே தெரிவித்துள்ளார்.
எந்த வகையிலும் சம்பள துண்டிப்புக்கு இடம் வழங்க மாட்டோம் என்று ஆசிரியர் சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதிபர், ஆசிரியர் போராட்டத்தை அடக்குமுறைகளின் மூலம் கட்டுப்படுத்த முடியாது என்று தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.