தேசிய ‘மீலாதுன் நபி’ தின நிகழ்வு பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று அலரி மாளிகையில் நடைபெற்றுள்ளது.
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.
முஸ்லிம்களின் இறுதி இறைத் தூதர் முஹம்மத் நபியின் பிறந்த தினத்தை முன்னிட்டு மீலாதுன் நபி தினம் கொண்டாடப்படுகிறது.
இதன்போது, தேசிய மீலாதுன் நபி தின விழா 2021 ஐ முன்னிட்டு நினைவு முத்திரையும், முதல் நாள் உறையும் பிரதமர் தலைமையில் வெளியிடப்பட்டது.
முஹம்மது நபி பிறந்த தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இதன்போது பிரதமரினால் பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன.