July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வட்ஸ்அப், பேஸ்புக்கில் இயங்கும் ஆபாச தகவல் பரிமாற்ற குழுக்கள் தொடர்பில் விசாரணை!

இணையத்தளங்களின் ஊடாக இடம்பெறும் பாலியல் குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதற்காக இலங்கை குற்றப்புலனாய்வு திணைக்களம் விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி வட்ஸ்அப், பேஸ்புக் மற்றும் இமோ உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் ஆபாச தகவல் பரிமாற்ற செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்களை அடையாளம் காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறாக இயங்கும் 30 சமூக வலைத்தள குழுக்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வட்ஸ்அப், பேஸ்புக் மற்றும் இமோ ஆகியவற்றில் பல்வேறு பெயர்களில் செயற்பாட்டில் இருக்கும் குறித்த குழுக்களை இயக்கும் நபர்களை அடையாளம் காண்பதற்கு நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.