அரசாங்கத்திற்குள் வாத பிரதிவாதங்கள், கருத்து முரண்பாடுகள், கொள்கை ரீதியிலான பிரச்சினைகள் வருவது ஒரு ஜனநாயக அரசாங்கத்தின் அடையாளம் என்றே நான் கருதுகின்றேன் என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னரும் அரசாங்கத்தில் இவ்வாறான தீர்மானங்கள் எடுக்கப்பட்ட வேளையில் அதனை எதிர்த்து நாம் செயற்பட்டோம்.இப்போதும் அவ்வாறே இடம்பெற்றுக் கொண்டுள்ளது. அரசாங்கம் தவறான தீர்மானம் எடுக்கும் வேளையில் அதனை சுட்டிக்காட்டி அரசாங்கத்தை சரியான திசையில் கொண்டு நகர்த்தும் கடமை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் எமக்கு உண்டு எனக் கூறியுள்ள அவர்,
அரசாங்கத்தில் நாம் எதிர்கட்சிகள் என்ற கருத்தையும் ஏற்கனவே கூறியிருந்தேன்.பங்காளிக்கட்சிகள் இந்த விடயங்கள் குறித்து மீண்டும் பேசுவோம்.அதன் பின்னர் ஒரு தீர்மானம் எடுக்கப்படும்.பிரதமர் மற்றும் நிதி அமைச்சருடன் பேசுமாறு ஜனாதிபதி கூறியுள்ளார். அவர்களுடன் பேசுவதா, இல்லையா என்பதை நாம் விரைவில் தீர்மானிப்போம் என்றார்.