January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அடிதடியில் முடிந்த அபிவிருத்திக் குழுக் கூட்டம்

நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை – கெட்டபுலாவ பிரதேச அபிவிருத்தி தொடர்பில் இன்று நடைபெற்ற கூட்டம் மோதலில் முடிவடைந்துள்ளது.

கெட்டபுலாவ பிரிதேச அபிவிருத்தி அதிகாரிகள் அலுவலகத்தில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.

கொத்மலை பிரதேச அபிவிருத்தி குழுவின் தலைவர், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் ஜயதிஸ்ஸ மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதேச சபை உறுப்பினர் சுபாசித த சில்வா ஆகியோருக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டுள்ளது.

இதன்போது இருதரப்பு ஆதரவாளர்களும் அந்த இடத்தில் மோதிக்கொண்டுள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் நாவலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றறார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்த இரு தரப்பினரும் நாவலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.