ஆப்கானிஸ்தானுக்கான அமெரிக்க தூதுவராக செயற்பட்ட ஸால்மே கலீல்ஸாத் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து, தலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றி இரண்டு மாதங்களாகின்றன.
அமெரிக்க படைகளின் வெளியேற்றத்தை தொடர்ந்து, ஆப்கான் விவகாரங்களில் ஏற்பட்ட தீவிர அழுத்தங்களே ஸால்மே கலீல்ஸாத் பதவியை இராஜினாமா செய்வதற்கு காரணமாக அமைந்துள்ளதாக தெரிய வருகிறது.
ஆப்கானிஸ்தானுக்கான அமெரிக்க தூதரகம் தற்போது கட்டாரில் இருந்தே இயங்கி வருகிறது.
ஆப்கானிஸ்தானுக்கான புதிய அமெரிக்க தூதுவராக டொம் வெஸ்ட் நியமிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டணி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.
ஸால்மே கலீல்ஸாத்தின் இதுவரை கால சேவைகளைப் பாராட்டி, அமெரிக்க இராஜாங்க செயலகம் நன்றி தெரிவித்துள்ளது.