
யாழ்ப்பாணத்தின் முக்கிய மரபுரிமைச் சின்னங்களில் ஒன்றான கீரிமலை நகுலேஸ்வர சுவாமிகள் தண்ணீர்ப் பந்தல் (சிறாப்பர் மடம்) சீரமைக்கப்பட்டு திறந்து வைக்கப்படவுள்ளது.
தொல்லியல் திணைக்களத்தினால் சுப்பிரமணியர் கதிரவேலு(சிறாப்பர்) குடும்பத்தின் நேரடி வாரிசுகள் இணைந்து இந்த தண்ணீர்ப் பந்தலை சீரமைப்பு செய்துள்ளனர்.
அதன் பழைமை வாய்ந்த பிள்ளையார் சிலை நாளை புதன்கிழமை (20) முற்பகல் 9.30 மணிக்கு ஆகம முறைப்படி திறந்து வைக்கப்படவுள்ளது.