July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஊடகவியலாளர் நிமலராஜனின் 21 ஆம் ஆண்டு நினைவு தின நிகழ்வு

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின், 21 ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் நிமலராஜனின் உருவப்படத்திற்கு யாழ். மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணன் மற்றும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர் நிரோஸ் ஆகியோர் இணைந்து மலர் மாலை அணிவித்தனர்.

இதனையடுத்து யாழ். மாநகர சபை உறுப்பினர் ஜெயசீலன் நினைவுச்சுடரை ஏற்றியதுடன் ஊடகவியலாளர்கள் பலரும் மலரஞ்சலி செலுத்தினர்.

2000 ஆம் ஆண்டு, ஒக்டோபர் 19 ஆம் திகதி இரவு 10 மணியளவில் யாழ்ப்பாணம் நகரின் உயர் பாதுகாப்பு வலயப் பகுதியாக இருந்த, கச்சேரியடிப் பகுதியில் உள்ள வீட்டில் வைத்து அவர் படுகொலை செய்யப்பட்டார்.

வீட்டுக்குள் நுழைந்த ஆயுததாரிகள் அவர் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அவர் உயிரிழந்தார்.

அத்துடன் அவரது வீட்டுக்குள் ஆயுததாரிகள் கைக்குண்டை வீசிவிட்டுச் சென்றதில், நிமலராஜனின் தந்தை, தாய், மருமகன் உள்ளிட்டோரும் படுகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

This slideshow requires JavaScript.