
இலங்கையில் ஆபாசப் பேச்சுக்களைத் தடை செய்வதற்கு இணையாக தண்டனைச் சட்டக் கோவையை திருத்தம் செய்வதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதுதொடர்பான சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் நீதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கே, அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆபாசப் பேச்சுக்களைத் தடை செய்யும் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக 2021 ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
குறித்த புதிய சட்டம் அறிமுகப்படுத்துவதற்கு இணையாக தண்டனைச் சட்டக் கோவையின் 285, 286 மற்றும் 289 (அ) உறுப்புரைகளை முடிவுறுத்துவதற்காக சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதலும் கிடைத்துள்ளது.