November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஹட்டன் நகர சபைத் தலைவர் மூடிய உடற்பயிற்சிக் கூடத்தை அதிரடியாகத் திறந்த ஜீவன்

ஹட்டன் நகர உடற்பயிற்சி கூடத்தை மூட நகர சபை நடவடிக்கை எடுத்ததைத் தொடர்ந்து அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தனது சொந்த நிதியில் நகர சபைக்கான வரியை செலுத்தி, மீண்டும் உடற்பயிற்சி கூடத்தை திறந்த வைத்துள்ளார்.

ஹட்டன் நகர சபைக்கு அருகாமையில் உள்ள உடற்பயிற்சி கூடத்தின் உரிமையாளர் நகர சபைக்கான வரிப் பணத்தை செலுத்த தவறியதால், குறித்த உடற்பயிற்சி நிலையத்தை மூடிவிடுவதற்கு ஹட்டன் நகர சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த விவகாரம் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டதைத் தொடர்ந்து, மீண்டும் திறக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

This slideshow requires JavaScript.