கோழித் தீவனத்திற்கு பயன்படுத்தும் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதால், முட்டை விலையை அதிகரிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி தற்போது 20 முதல் 22 ரூபா வரையில் விற்பனையாகும் முட்டையின் விலை மேலும் அதிகரிக்கலாம் என்று அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், உற்பத்திச் செலவைக் கட்டுப்படுத்தும் வகையில் அரசாங்கம் தங்களுக்கு நிவாரணங்களை வழங்குமாக இருந்தால், விலையை அதிகரிக்காது இருக்கலாம் என்று இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கோழித் தீவனத்திற்காக பிரதானமாக பயன்படுத்தும் சோளம் மற்றும் சோயா ஆகியவற்றின் விலைகள் அதிகரித்துள்ளமையினாலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.