
கெரவலபிட்டிய மின்னுற்பத்தி நிலையம் தொடர்பாக அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளின் கோரிக்கையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நிராகரித்துள்ளார்.
கெரவலபிட்டிய மின்னுற்பத்தி நிலையத்தின் 40 வீத பங்குகளை விற்பனை செய்வது குறித்து அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகள் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல் ஒன்றைக் கோரியிருந்தனர்.
அத்தோடு, அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு குறித்த மின் நிலையத்தை வழங்கும் தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யுமாறும் ஆளும் தரப்பின் 11 கட்சிகள் கேட்டுக்கொண்டிருந்தன.
குறித்த விடயத்தை அமைச்சரவை அல்லது ஆளும் கட்சியின் கூட்டத்தில் கலந்துரையாடுவதே சிறந்தது என்று ஜனாதிபதி பதிலளித்துள்ளார்.
இதனால், பங்காளிக் கட்சிகளின் கலந்துரையாடலுக்கான கோரிக்கையை ஜனாதிபதி நிராகரித்துள்ளார்.