July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘யாழ்ப்பாணத்தில் சத்திர சிகிச்சை வரலாறு’ நூல் வெளியீட்டு விழா

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும், யாழ். போதனா வைத்தியசாலை சத்திர சிகிச்சை நிபுணருமாகிய வைத்தியக் கலாநிதி சி.ராஜேந்திரா எழுதிய “யாழ்ப்பாணத்தில் சத்திர சிகிச்சை வரலாறு” என்ற நூல் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

சுகாதார நடைமுறைகளை பின்பற்றி, யாழ். தாதியர் பயிற்சிக் கல்லூரியில் இந்த விழா நடத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறீசற்குணராஜா கலந்து கொண்டதுடன், யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் சத்தியமூர்த்தி நூலை வெளியிட்டு வைத்தார்.

This slideshow requires JavaScript.

இந்த நிகழ்வில் இலங்கை சுகாதாரத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் எஸ். ஶ்ரீ தரன், வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன், போதனா வைத்தியசாலை சத்திர சிகிச்சை நிபுணர் வைத்திய கலாநிதி வி. சுதர்சன், யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடாதிபதி மருத்துவர் இ.சுரேந்திரகுமாரன், மருத்துவ பீடத்தின் முன்னாள் பீடாதிபதியும் சத்திர சிகிச்சை நிபுணருமாகிய வைத்தியக் கலாநிதி எஸ். ரவிராஜ், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உறுப்பினரான பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் உட்படப் பலரும் கலந்து கொண்டனர்.