May 25, 2025 14:07:17

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கெரவலபிட்டிய மின் நிலையம் தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு!

கெரவலபிட்டிய மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு விற்பனை செய்ததற்கு எதிராக கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் மற்றும் எல்லே குணவன்ஷ தேரர் ஆகியோர் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளனர்.

நியூ போட்ரஸ் நிறுவனத்தின் எரிவாயு விநியோக திட்டத்தை இடைநிறுத்தக் கோரியும் அவர்கள் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

குறித்த மனுவின் பிரதிவாதிகளாக பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ, அமைச்சரவை, அமைச்சரவையின் செயலாளர், நிதி அமைச்சின் செயலாளர், நியூ போட்ரஸ் நிறுவனம், சட்டமா அதிபர் உட்பட 54 பேர் பெயரிடப்பட்டுள்ளனர்.

சட்டத்தரணி மஞ்சுல பாலசூரிய ஊடாக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கெரவலபிட்டிய மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனமொன்றுக்கு வழங்கியதால் தங்களதும் நாட்டு மக்களினதும் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.