உலகளாவிய பட்டினிச் சுட்டியில் இலங்கை 65 ஆவது இடத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.
116 நாடுகளில் பெறப்பட்ட தரவுகளுக்கு அமைய இலங்கைக்கு 65 ஆவது இடம் கிடைத்துள்ளது.
100 புள்ளிகளுக்கு 16 புள்ளிகளைப் பெற்று இலங்கை பட்டினிச் சுட்டியில் முன்னேறியுள்ளது.
நாடுகளில் பட்டினியை இல்லாதொழிக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு அமையவே உலகளாவிய பட்டினிச் சுட்டி தயாரிக்கப்படுகிறது.
நாடுகளின் பட்டினி மற்றும் பசிப் போராட்டங்கள் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்துவதே, இவ்வாறு பட்டியலிடப்படுவதன் நோக்கமாகும்.