July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கிளிநொச்சி வைத்தியசாலையில் இரத்த சுத்திகரிப்பு பிரிவு திறந்து வைப்பு

Photo: Facebook/Rotary Club Of Kilinochchi Town – RCKT

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் இரத்த சுத்திகரிப்பு பிரிவு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி நகர றோட்டறிக் கழகம், அவுஸே்ரேலிய மருத்துவ நலச் சங்கத்தின் நிதி அனுசரணையுடன் 19.7 மில்லியன் ரூபா செலவில் இந்தப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.

5 இரத்தச் சுத்திகரிப்பு இயந்திர தொகுதிகளை கொண்டதாக அமைக்கப்பட்டுள்ள இந்தப் பிரிவு ஒக்டோபர் 17 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் மாவட்ட வைத்தியசாலையில் நீண்ட காலமாக நிலவி வந்த குறைபாடு நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன், கிளிநொச்சி மாவட்ட சிறுநீரக நோயாளர்கள் யாழ்ப்பாணம் செல்லாது இங்கேயே இரத்த சுத்திகரிப்பை செய்துகொள்ள முடியும்.

இந்த மாவட்டத்தின் சிறுநீரக நோயாளர்கள் இதுவரை காலமும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கே செல்ல வேண்டி ஏற்பட்டது. இதனால் போக்குவரத்துகளுக்காக நோயாளர்கள் அதிகளவில் பணத்தை செலவிட வேண்டி வந்தது.

இந்நிலையில் தற்போது கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அதற்கான பிரிவு அமைக்கப்பட்டுள்ளதால், பணச் செலவு இன்றியும் மற்றும் நீண்ட பயணங்கள் இன்றியும் மாவட்ட நோயாளர்களுக்கு இரத்த சுத்திகரிப்பை செய்ய முடியும்.

This slideshow requires JavaScript.

இதனை திறந்து வைக்கும் நிகழ்வில் மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர் எஸ். சுகந்தன், வடக்கு மாகாண பிரதம செயலாளர் எஸ்.எம். சமன்பந்துல சேன, கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் பி. செந்தில் நந்தன், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ந. சரவணபவன் கிளிநொச்சி நகர ரோட்டரி கழகத்தின் தலைவர் ஜயசுந்தர, மற்றும் வைத்தியர்கள் தாதியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.