July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘மலிவு விலையில் மின்சாரத்தை விநியோகிப்பதற்கான கொள்கை தேவை’: சிரேஷ்ட மின்சார பொறியியலாளர்கள்

Electricity Power Common Image

மின்சார பாவனையாளர்களுக்கு மலிவு விலையில் மின்சாரத்தை விநியோகிப்பதற்கு இலங்கை மின்சார சபைக்கு முறையான நீண்டகால கொள்கையொன்று அவசியம் என புதிதாக நிறுவப்பட்ட இலங்கை மின்சார சபையின் சிரேஷ்ட மின்சார பொறியியலாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையில் நிலவும் மின்சார நெருக்கடிகளுக்கு இலங்கை மின்சார சபையே பொறுப்புக்கூற வேண்டும் எனவும் சிரேஷ்ட மின்சார பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபையை நவீனமயப்படுத்தி, எரிசக்தி சந்தையில் மாற்றங்களை ஏற்படுத்தாமல் எதிர்கால மின்சார நெருக்கடிகளை தவிர்க்க முடியாது என குறித்த சங்கம் வலியுறுத்தியுள்ளது.

“எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய மின்சார நெருக்கடிகளை வெற்றிகரமாக சமாளிக்க வேண்டுமாயின் இ.மி.ச. நவீனமயப்படுத்தப்பட வேண்டும்.

மின்சார கட்டணத்தை அதிகரிக்காது, இலங்கை மின்சார சபையை நட்டமடையும் நிலையிலிருந்து பாதுகாக்க முடியும்.

அதற்கு குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால தீர்வுகளை கொண்ட வேலைத்திட்டமொன்றை சமர்ப்பிக்கவுள்ளோம்” என்று இலங்கை மின்சார சபையின் சிரேஷ்ட பொறியியலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.